டெல்லியில் எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பளத்தை உயர்த்துவதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளாக ஊதியம் மற்றும் படிகள் சேர்த்து எம்.எல்.ஏ.க்களுக்கு 54 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது 90 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
திறமையானவர்கள் அரசியலுக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.