சதாப்தி விரைவு ரயிலில் 20 ரூபாய் தேநீருக்கு, 50 ரூபாய் சேவை கட்டணமாக பெறப்பட்ட ஐஆர்சிடிசி ரசீதுவின் புகைப்படம் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
டெல்லியில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் போபால் சென்ற சதாப்தி ரயிலில் பயணித்த நபர் ஒருவர் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இதனை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரயில்வே அதிகாரிகள், சதாப்தி, ராஜதானி விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே உணவை முன் பதிவு செய்யாமல், ரயிலில் பயணிக்கும் போது ஆர்டர் செய்தால், சேவை கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும், தேநீர், காபியை ஆர்டர் செய்தாலும் இது பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.