தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முக்கு ஆதரவளிக்க உள்ளதாக சிரோண்மனி அகாலி தளம் கட்சி அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய, அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், சீக்கிய மக்களுக்கு எதிராக கொடுமைகள் இழைத்த காங்கிரசுக்கு ஒருபோதும் ஆதரவு இல்லை என்றார்.
இதேபோல், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகௌடாவும் திரௌபதி முர்முவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.