உதய்பூரில் தையல் கலைஞர் கன்னையா லால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலத்தில் 32 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மாவை ஆதரித்து சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டதால் ஏராளமான மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக கன்னையா லால் போலீசில் புகாரளித்த போதும் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என உதய்பூர் நகர போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, உதய்பூர் நகர ஐ.ஜி, எஸ்.பி உள்பட 32 மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளை ராஜஸ்தான் அரசு இடமாற்றம் செய்துள்ளது.