பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கூடுதல் வரி விதித்துள்ளது.
அதன்படி, ஒரு லிட்டர் டீசலுக்கு 13 ரூபாயும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 3 ரூபாயும் வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதால், உள்நாட்டில் எரிபொருள் கூடுதலாக கிடைக்கும் என்றும் பெட்ரோல், டீசல் விலையில் பாதிப்பு ஏற்படாது என்றும் மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.