ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டத் தடை நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைத்து சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன் படி, பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சிகள், கொடிகள், தட்டுகள், ஸ்ட்ரா, ஸ்வீட் பாக்ஸ்கள், அழைப்பிதழ் அட்டைகள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்காணிக்க மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் தேசிய கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.