ஜம்மு காஷ்மீரின் இறுதி வாக்காளர் பட்டியலை அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர் வெளியாகும் முதல் வாக்காளர் பட்டியல் இது.
தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டதையடுத்து புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 31 அச்சிடும் வகையில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்யுமாறு ஜம்மு காஷ்மீர் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.