நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
புதிய நாடாளுமன்ற வளாகம் தயாராகி வரும் நிலையில் பழைய கட்டடத்தில் நடைபெறும் கடைசிக் கூட்டம் இதுவாக இருக்கும். மொத்தம் 18 அமர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது