மகாராஷ்டிர மாநிலம் தாராபூர் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயண தொழிற்சாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெடி விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு தீ மற்றும் கரும்புகை வெளியேறியது.
தீவிபத்து தொழிற்சாலையின் குடோனில் ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. அடுத்தடுத்து எட்டு இடங்களில் வெடி விபத்து ஏற்பட்டதால் எளிதில் கட்டுப்படுத்த முடியாத அளவில் தீ பரவி விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது.
ரசாயண புகை காற்றில் கலந்ததால் அண்டை குடியிருப்புவாசிகள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகினர்.