ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை, தேடி வந்து அமெரிக்க அதிபர் பைடன் கைகுலுக்கி வாழ்த்தியது உலக அரங்கில் இந்திய நாட்டின் பெருமையை அதிகரித்துள்ளது.
கூட்டம் முடிந்து ஜி7 நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டீனுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
திடீர் விருந்தாளியாக வந்த பைடன், பிரதமர் மோடியின் பின்புற தோளை தட்டி கைகுலுக்கி வாழ்த்தினார். பிரதமர் மோடியை தேடி வந்து அமெரிக்க அதிபர் பைடன் கைகுலுக்கியது உலக அரங்கில் நாட்டின் பெருமையை உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.