லடாக் எல்லைப் பகுதியில் தனது படை பலத்தையும், ஆயுத பலத்தையும் சீனா பல மடங்கு உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள், ஆயுத தளவாடங்கள் மற்றும் நவீன ரக ஏவுகணைகளை லடாக் எல்லைப் பகுதிகளுக்கு இந்திய ராணுவம் நிலைநிறுத்தி, கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், லடாக்கின் மேற்கு பகுதியில் 100 கிலோ மீட்டரைச் சுற்றி படைகளை குவித்துள்ள சீனா, உடனடியாக லடாக்குக்கு ராணுவத் தளவாடங்களை கொண்டுவரும் வகையில் சுரங்க சாலைகள், விமான ஓடுபாதைகளையும் அமைத்துள்ளது.
50 கிலோ மீட்டர் தூரம் வரை ஏவுகணைகளை வீசக்கூடிய பீரங்கிகளும் கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் நவீன ரக 'ஹெச்.க்யு 9' ரக ஏவுகணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.