பஞ்சாப்பில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனது மகனை கண்ணெதிரே சுட்டுக்கொன்று விட்டதாக ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் போப்பிலி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிகாரிகள் சோதனையிட வருவதை அறிந்து ஐஏஎஸ் அதிகாரியின் மகன் கார்த்திக் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாக சோதனையிட சென்ற ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் தம் மகன் சுட்டுக் கொல்லப்பட்டதை தாம் நேரில் கண்ட சாட்சி என்று சஞ்சய் போப்பிலி கூறியுள்ளார்.
இதனிடையே, சஞ்சாய் போப்பிலி வீட்டில் நடைபெற்ற சோதனையில் 12 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.