குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு குறித்து டுவிட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பிரபல பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது டுவிட்டரில், திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார் என்று கேள்வி கேட்டிருந்தார். முக்கியமாக கவுரவர்கள் யார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய இந்த டுவிட்டர் பதிவு எஸ்சி மற்றும் எஸ்டி இனத்தை இழிவு படுத்துவதாக உள்ளதாகவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெலுங்கானா பாஜக தலைவர் Gudur Narayana Reddy போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் தாம் திரௌபதி முர்முவை இழிவுபடுத்தவில்லை என்று ராம்கோபால் வர்மா மறுப்பு தெரிவித்துள்ளார்.