பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி உள்ளிட்ட 63 பேர் மீது தவறு ஏதும் இல்லை என தெரிவித்தது.
இதை எதிர்த்து கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் எம்.பி. ஈசன் சாஃப்ரியின் மனைவி ஜாகியா உச்ச நீதிமன்றத்தை நாடினார். சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கையை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட நிலையில், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.