தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில், அக்னிபாதை திட்டத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது ரயில் இருக்கைகளுக்குத் தான் தீ வைத்த காட்சிகளை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில்களுக்கு தீ வைத்தது தொடர்பாக இதுவரை 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரித்திவிராஜ் என்ற இளைஞர் ரயில் இருக்கைகளுக்குத் தீ வைக்கும் காட்சிகளை தன் நண்பர்கள் மூலம் செல்போனில் வீடியோ எடுத்து அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.