குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் 17 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர், வாஜ்பாய் ஆகியோரின் அமைச்சரவையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட யஷ்வந்த் சின்ஹா, திரிணாமூல் காங்கிரசின் துணைத்தலைவர் பதவியை இன்று காலை ராஜினாமா செய்தார்.
ஜூலை 18ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் 27ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என சரத்பவார் அறிவித்துள்ளார்.