குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது என 17 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மம்தா பானர்ஜி கூட்டிய கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம், திமுக, மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரின் பெயர்களை மம்தா பானர்ஜி முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது.
வேட்பாளர் யார் என்பதை இறுதிசெய்ய அடுத்த சில நாட்களில் மீண்டும் கூடிப் பேச உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.