சென்னையில் இருந்து வந்த சொகுசு கப்பலில் இருக்கும் ஒரு சில அம்சங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிப்பதால் புதுச்சேரிக்கு வர மாநில அரசு அனுமதி வழங்கவில்லை என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடற்கரையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் மாநில அரசின் எண்ணம் என்றும் தெரிவித்தார்.