தெலுங்கானாவை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், உலகின் 7 கண்டங்களில் உள்ள 7 உயரமான சிகரங்களில் மீது ஏறி சாதனை படைத்துள்ளார்.
நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பூர்ணா மாலாவத், கடந்த 2014-ஆம் ஆண்டு தனது 13 வயதில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மீது ஏறி இளம் பெண் சாதனையாளரானார்.
இந்த நிலையில், தற்போது 7 கண்டங்களில் உள்ள எவரெஸ்ட், கிளிமஞ்சாரோ மலை, எல்ப்ரஸ் மலை, அகோன்காகுவா, மவுண்ட் கார்டென்ஸ் பிரமிட், மவுண்ட் வின்சன் மற்றும் மவுண்ட் தெனாலி ஆகிய சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.