கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 2ஆம் தேதி சோனியா காந்திக்கு, தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் லேசான அறிகுறி காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில், கொரோனா தொடர்பான சிகிச்சைக்காக சோனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.