இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் கடலடிக் கண்காணிப்பு மற்றும் தாக்குதலுக்குப் பயன்படுத்தும் வகையில் நீர்மூழ்கி டிரோன்களைத் தயாரிக்கப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
40 டன் எடைகொண்ட ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தின் வடிவமைப்பு, மேம்பாடு, கட்டுமானம் ஆகியவற்றில் தொழில்நுட்ப உதவிக்காக உலக அளவிலான நிறுவனங்களிடம் விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்களை மசாகான் கப்பல்கட்டும் நிறுவனம் வரவேற்றுள்ளது.
நீர்மூழ்கி ஆளில்லா டிரோன்களைத் தயாரிக்கப் பெங்களூரைச் சேர்ந்த நியூ ஸ்பேஸ் ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனத்துடன் லார்சன் அண்ட் டூப்ரோ புரிந்துணர்வு உடன்பாடு செய்துள்ளது.
இந்தியாவில் இதுவரை நீர்மூழ்கி டிரோன்கள் கண்காணிப்பு, கடலடி ஒலிப்பதிவு, குழாய்ப்பாதை, தொலைத்தொடர்புக் கம்பிவடப் பராமரிப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.