குஜராத்தின் பனாஸ் கந்தா (Banas Kantha) மாவட்டத்தில் குளத்தில் இருக்கும் தண்ணீர் திடீரென்று பிங்க் நிறத்தில் மாறியது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே சைகம் கிராமத்தில் (Suigam) மகாதேவி கோயில் அருகே குளம் அமைந்துள்ளது.
இந்த குளத்தில் இருக்கும் தண்ணீர் திடீரென்று பிங்க் நிறத்தில் மாறியதாக அப்பகுதி மக்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அந்த நீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்