நான்கு மாநிலங்களில் 16 இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக 8 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் மூன்று இடங்களையும், பாஜக ஓரிடத்தையும் பிடித்தன. பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட ஊடக அதிபர் சுபாஷ் சந்திரா தோல்வியடைந்தார். மகாராஷ்டிரத்தில் பாஜக மூன்று இடங்களையும், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியன ஒவ்வொரு இடத்தையும் பிடித்தன.
சிவசேனாவின் இரண்டாவது வேட்பாளர் சஞ்சய் பவார் தோல்வியடைந்தார். கர்நாடகத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ் உட்பட பாஜகவின் மூன்று வேட்பாளர்களும் வெற்றிபெற்றனர்.
காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ் வெற்றிபெற்றார். அரியானாவில் பாஜக வேட்பாளரும், பாஜக ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஊடக அதிபர் கார்த்திகேய சர்மாவும் வெற்றிபெற்றனர். காங்கிரசின் அஜய் மக்கன் தோல்வியடைந்தார்.