கொரோனா தொற்றுக்கு பின் விமான கட்டணங்கள் அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா கட்டுக்குள் வந்ததை அடுத்து பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையின் எதிரொலியாக உலகளாவிய கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வு, கடந்த 2 ஆண்டுகளில் இழந்த வருவாய் இழப்பை ஈடுகட்டுதல் மற்றும் பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விமான டிக்கெட்டுகளின் விலை அடிக்கடி உயர்ந்து காணப்படுகின்றன.
எவ்வளவு விலை கொடுத்தும் டிக்கெட்டுகளை பெற சில பயணிகள் தயாராக உள்ளதால், விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது