மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
மும்பை - அகமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் தொலைவுக்கு புல்லட் ரயில் திட்டப் பணிகள் 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் குஜராத்தின் சூரத்தில் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார்.