பணத்தாள்களில் ரவீந்திரநாத் தாகூர், அப்துல்கலாம் ஆகியோரின் படங்களை இடம்பெறச் செய்வது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து மதிப்புள்ள ரூபாய்த் தாள்களிலும் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் படம் இடம்பெற்றுள்ளது.
இனிப் புதிதாக அச்சிட உள்ள பணத்தாள்களில் தாகூர், அப்துல் கலாம் ஆகியோரின் படங்களைப் பயன்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கியும், நிதியமைச்சகமும் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.