ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவன பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்ததை அடுத்து அதன் தலைவர் முகேஷ் அம்பானி ஆசியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்திலும், உலக அளவில் 8வது இடத்திலும் இருக்கிறார்.
நடப்பு ஆண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 969 கோடி டாலர் உயர்ந்துள்ளது. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்ததால், 9870 கோடி டாலர் சொத்து மதிப்புடன் கவுதம் அதானி 9வது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.