மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், இந்திய விமானப்படைக்காக, நடுவானில் எரிபொருள் நிரப்புவதற்கான 6 விமானங்களை தயாரித்து வழங்க இருக்கிறது.
இதற்காக பயன்படுத்தப்பட்ட போயிங் 767 ரக பயணிகள் விமானங்கள் டெண்டர் முறையில் வாங்கப்பட்டு, எரிபொருள் நிரப்பும் விமானங்களாக மறு கட்டமைப்பு செய்யப்பட உள்ளன.
இந்த திட்டத்திற்காக இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்துடன், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தற்போது இந்திய விமானப்படை வசம் ரஷ்யாவின் தயாரிப்பான ஐஎல் ரகத்தை சேர்ந்த 6 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் உள்ளன.