நாட்டில் நிலக்கரித் தேவை அதிகரித்ததால் சரக்குப் போக்குவரத்தின் மூலம் மே மாதத்தில் ரயில்வே துறை 14 ஆயிரத்து 113 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் ரயில்வே மூலம் 170 கோடி டன் நிலக்கரி ஏற்றிச் செல்லப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதற்காகக் கூடுதலாக ஒரு இலட்சம் வேகன்களைப் போக்குவரத்தில் சேர்க்க ரயில்வே துறை திட்டமிட்டு வருகிறது.