டெல்லி உயர்நீதிமன்றத்தில், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனுவை, பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் திரும்ப பெற்றார்.
பஞ்சாப் பாடகர் சித்து மூசே வலாவின் கொலை நிகழ்வில் மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய், தன்னை பஞ்சாப் போலீசார் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல வாய்ப்பிருப்பதாக அச்சம் தெரிவித்து டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை கிழமை நீதிமன்றம் நேற்று ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவையும் அவர் திரும்ப பெற்றுள்ளார்.