பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 8 வது ஆண்டை நிறைவு செய்வதைக் கொண்டாட பாஜக பெரிய அளவில் திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் நடைபெற உள்ள பிரச்சாரக் கூட்டங்களில் பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். சிறந்த அரசு நிர்வாகம் ,ஏழை மக்களுக்கான திட்டங்கள் போன்ற மோடி அரசின் சாதனைகளை எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங், பிரதமர் மோடி மக்களிடம் செல்வாக்கு பெற்ற உறுதியும் செயல்திறனும் மிக்க பிரதமராக இருப்பதாகக் கூறினார்.