டெல்லியில் வசித்து வந்த பிரபல பாடகி சங்கீதா 12 நாட்களாக காணவில்லை என்று தேடப்பட்ட நிலையில் ஹரியானா மாநிலம் ரோட்டக் மாவட்டத்தின் மஹம் எனுமிடத்தில் புதைக்கப்பட்ட நிலையில் அவர் உடல் மீட்கப்பட்டுள்ளது.
ரோட்டக்கிற்கு ஒரு இசை வீடியோ படப்பிடிப்புக்காக சங்கீதா சென்றிருந்தார். அவருடன் இணைந்து பணியாற்றி வந்த ரவி மற்றும் ரோகித் ஆகியோர் பாடகியை கடத்திச் சென்று கொலை செய்து புதைத்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரோகித்துடன் சங்கீதா உணவு அருந்திய ஓட்டலின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.