டெல்லியின் நெருக்கடியான இடங்களில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க, இரு ரோபோட்களை தீயணைப்புத்துறையில் இணைத்துள்ளது அம்மாநில அரசு.
கடந்த வாரம் முன்ட்கா (Mundka) பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோட்கள், டெல்லியின் குறுகலான சாலைகள் மற்றும் இட நெருக்கடி மிகுந்த இடங்களில் ஏற்படும் தீயை அணைக்க பயன்படும்.