மத்திய அரசுக்கு உபரித்தொகையாக 30,307 கோடி ரூபாய் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பையில், ரிசர்வ் வங்கி இயக்குநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், அதன் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. தற்போதைய பொருளாதார சூழல் குறித்தும், உலகளவில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றங்களினால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், சவால்கள் குறித்தும் ஆலோசிக்கபட்டது.