வாரணாசி ஞான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தைக் காசி விசுவநாதர் கோவிலிடம் ஒப்படைக்க வேண்டும் என அதன் அறங்காவலர் குழுத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஞான்வாபி மசூதியில் வீடியோ பதிவுடன் ஆய்வு நடத்தியதில் அங்கு ஒரு சிவலிங்கம் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அறிந்த வாரணாசி நீதிமன்றம் அந்த இடத்துக்கு யாரும் செல்ல முடியாதபடி மூடி முத்திரையிடும்படி அறிவுறுத்தியது.
இதையடுத்து அப்பகுதியில் மத்திய ரிசர்வ் காவல்படை பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை அந்தச் சிவலிங்கத்தை வழிபாட்டுக்காகக் காசி விசுவநாதர் கோவிலில் ஒப்படைக்கும்படி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் நாகேந்திர பாண்டே கோரியுள்ளார்.