செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

தொடர் மழையால் வெள்ளக்காடாய்க் காட்சியளிக்கும் அசாம்

May 18, 2022 06:42:16 AM

அசாமில் பெய்துவரும் கனமழையால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையில் ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அசாமின் கசார் மாவட்டத்தில் வீடுகள், சாலைகள், வயல்வெளிகள் என எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இம்மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

காமரூப் மாவட்டத்தில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. விளைநிலங்கள், குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

காம்பூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் 26 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரித்துள்ளது. 89 முகாம்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் மாநில மீட்புக்குழுவினரும் முழு வீச்சில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படை மற்றும் ராணுவம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். ஆங்காங்கே ஏற்பட்டிருக்கும் நிலச்சரிவுகளால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா, மீசோரம், மணிப்பூர் ஆகிய அண்டை மாநிலங்களுக்கு சாலை- ரயில் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹேமந்த் அபிஸ்வாவுடன் தொலைபேசி மூலம் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக உறுதிளித்துள்ளார்.


Advertisement
நடிகர் சித்திக்கின் மீது நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகார்..
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தரப்பு மனு தள்ளுபடி... சித்தராமையாவை விசாரிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தது செல்லும்
திருப்பதி கோயில் முன் சத்தியம் செய்த கருணாகர ரெட்டி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு
காளஹஸ்தியில் ராகு - கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்த நடிகை நமீதா
புதுச்சேரியில் ஒரு வாரத்தில் 167 பேருக்கு டெங்கு பாதிப்பு
ஆஸ்கார் விருதிற்கு இந்தியா சார்பில் அனுப்ப லாபதா லேடிஸ் திரைப்படம் பரிந்துரை
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள், பெண்கள் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேத பண்டிதர்கள் முன்னிலையில் சாந்தி யாகம்
ஐஃபோன் 16 சீரிஸ் விலை - இந்தியாவை விட அமெரிக்கா, துபாய், கனடாவில் விலை குறைவு
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

Advertisement
Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...


Advertisement