மத்திய பிரதேசத்தில் மான் வேட்டையைத் தடுக்கச் சென்ற 3 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு தாமதமாக சென்றதாக குவாலியர் ஐ.ஜி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குணா மாவட்ட வனப்பகுதியில் புல்வாய் மான்கள் அடிக்கடி வேட்டையாடப்படுவதாக கூறப்படும் நிலையில், அதனை வேட்டையாடும் கும்பலை பிடிக்க போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வேட்டையர்களுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில், எஸ்.ஐ. உள்ளிட்ட 3 போலீசார் உயிரிழந்ததுடன், வேட்டையர்களில் ஒருவரும் பலியாகினார்.