காலியிடங்களை நிரப்பாவிட்டால் தீர்ப்பாயங்கள் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயமான சிஏடி(CAT) யில் உள்ள காலியிடங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மொத்தம் உள்ள 69 தீர்ப்பாயங்களில் 40 காலியிடங்களாக இருப்பதை சுட்டிக் காட்டியது.
மீதமுள்ள 29 தீர்ப்பாய நடுவர்கள் பதவி விலகினால் தீர்ப்பாயமே கவிழ்ந்துவிடும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். யாரும் விசாரிக்கவில்லை என்றால் தீர்ப்பாயங்கள் எப்படி நீதியை வழங்க முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜூலை மாதத்திற்குள் 34 காலி இடங்கள் நிரப்பப்படும் என்று மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.