நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷாகில் ஆகியோர் தொடர்புடைய இருவரை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்தனர்.
மும்பை கோரிகான் பகுதியில் அரிப் அபுபக்கர் ஷேக் மற்றும் ஷபீர் அபுபக்கர் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருவரையும் வரும் 20ஆதேதி வரை காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தாவுத் தொடர்புடைய டி- கேங்கிடம் ஹவாலா மூலம் பணம் பெற்றதாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.