கடந்த 2014ஆம் ஆண்டில் நாட்டில் 400 தொடக்க நிலை தொழில் நிறுவனங்கள் மட்டுமே இருந்ததாகவும், தற்போது அந்த எண்ணிக்கை 70 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் தொடக்க நிலை தொழில் நிறுவனங்களுக்கான கொள்கையை காணொலி மூலம் பிரதமர் வெளியிட்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் தற்போது மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி சிறிய நகரங்களிலும் தொடக்க நிலை தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளதாகவும், குறிப்பாக சுமார் 50% நிறுவனங்கள் சிறிய நகரங்களிலேயே அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டில் உள்ள தொடக்க நிலை தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களாக மாறி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.