வரும் மே 27ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுப்பகுதியில் மே 15ஆம் தேதியன்று தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் மாதத்திற்குள் கேரளாவை பருவ மழை அடைய உள்ளதாக குறிப்பிட்ட இந்திய வானிலை ஆய்வு மையம் , குறிப்பிட்ட தேதிக்கு 4 நாட்கள் முன்னரோ அல்லது பின்னரோ அங்கு மழை தொடங்கலாம் என குறிப்பிட்டுள்ளது.