கோடைக் காலத்தில் நண்பகலுக்குள் பள்ளி வகுப்புகளை முடிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து கல்வி அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், காலை 7 மணிக்கு வகுப்புகளை துவங்கி நண்பகலுக்குள் வகுப்புகளை நிறைவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி நேரத்தை குறைக்கவும், அசெம்ப்ளி அல்லது பிரார்த்தனைக் கூட்டத்தை நிழலான பகுதிகளில் நடத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.