மோடியின் 20ஆண்டு அரசியல் வாழ்க்கை பற்றிய நூலைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு வெளியிட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் நூலைப் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய வெங்கைய நாயுடு நூலில் பிரதமர் மோடியின் பன்முகத் தன்மை, தனித்த சிந்தனை - செயல்முறை, முன்னோடி அணுகுமுறை ஆகியன பற்றி இந்த புத்தகம் விளக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
மோடி குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற பின் மாநிலத்தைச் சிறப்பாக ஆட்சி செய்ததாகவும், அதனால் தான் தொடர்ந்து வெற்றிபெற்று வருவதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
மோடி ஆட்சிக்காலத்தில்தான் பயங்கரவாதம் உலகளவில் விவாதப் பொருளானதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.