நிலக்கரி இறக்குமதிக்கு ஆர்டர்கள் வழங்கவும், மின்னுற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்கலை உறுதி செய்யவும் மாநில அரசுகளுக்கு மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அறிவுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் மின் வழங்கலை உறுதி செய்வதற்காக மாநில அரசு அதிகாரிகள், மின்னுற்பத்தி நிறுவன அதிகாரிகளுடன் காணொலியில் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் ஆலோசனை நடத்தினார்.
அதில் மின்னுற்பத்திக்கு இறக்குமதி நிலக்கரியைப் பயன்படுத்துவது குறித்து மறுஆய்வு செய்ததுடன், நிலக்கரி இறக்குமதிக்கு ஆர்டர்களை வழங்கும்படி மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டார்.
உள்நாட்டில் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரி, மின்னுற்பத்தி நிலையங்களுக்கு விகிதாச்சார முறையில் பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு, மகாராஷ்டிர அரசுகள் நிலக்கரி இறக்குமதிக்கு ஆர்டர் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தன.