கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்ஷூ துலியா, மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜம்ஷட் புர்ஜொர் பர்திவாலா ஆகியோரை கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கொலீஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 34 என்ற முழு பலத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.