உத்தரக்கண்ட் மாநிலம் ஹரித்வாரில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக உத்தரப் பிரதேச அரசால் கட்டப்பட்ட விருந்தினர் இல்லத்தை இரு மாநில முதலமைச்சர்களும் கூட்டாக திறந்து வைத்தனர்.
ஆன்மீகத் தலமான ஹரித்வாருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக 43 கோடி ரூபாய் செலவில் 100 அறைகள் கொண்ட விருந்தினர் இல்லம் உத்தரப்பிரதேச அரசால் கட்டப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரக்கண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகிய இருவரும் இணைந்து விருந்தினர் இல்லத்தைத் திறந்து வைத்தனர்.