ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் தொடர்புடையதாக 140 பேரை போலீசார் கைது செய்த நிலையில், நாளை வரை ஊரடங்கை நீட்டித்தனர்.
ஒலிபெருக்கி பொருத்துவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கல் வீச்சு தாக்குதல், வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தில் தொடர்புடைய 140 பேரை கைது செய்ததாக தெரிவித்த ஜோத்பூர் போலீஸ் கமிஷனர், ஊரடங்கை நாளை வரை நீட்டித்ததாகவும், இணையசேவை தொடர்ந்து முடக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேநேரம் தேர்வு எழுதும் மாணவர்கள், செய்திதாள், பால், மருந்து, விநியோகம், ஊடகம், வழக்கறிஞர் வங்கி உள்ளிட்ட பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக கூறினார்.