அடுத்த 5 நாட்களுக்கு வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் வெப்ப நிலை குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வெப்ப நிலை குறைந்துள்ளதாகவும், அதிகபட்சமாக பதிவான ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, அரியானாவிலும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவு வெப்ப நிலை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்ட்ரா மற்றும் ராஜஸ்தானில் வெப்ப நிலை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு பகுதியில் நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக பஞ்சாப், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், புழுதிப் புயல் மற்றும் லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.