நீட் தேர்வு எழுதாமலேயே ஹோமியோபதி படிப்புகளில் மாணவர்கள் சேரலாம் என அறிவிப்பு வெளியிடும் கல்லூரிகளை நம்பி மாணவர்களும், பெற்றோர்களும் ஏமாற வேண்டாம் என தேசிய ஹோமியோபதி ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில கல்லூரிகள் நீட் தேர்வு எழுதாமலேயே மாணவர் சேர்க்கை நடத்துவதாக புகார் வந்துள்ளதாகவும், அந்த கல்லூரிகளின் அறிவிப்பை நம்பி சேர்ந்தால், பின்னர் சேர்க்கைக்கான அங்கீகாரம் கிடைக்காது என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி சேர்க்கை நடத்தி, பின்னர் காலியிடம் இருக்கும்பட்சத்தில் நீட் எழுதாத மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என்றே சில உயர்நீதிமன்றங்கள் இடைக்கால உத்தரவுகள் பிறப்பித்திருப்பதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.