ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டமாக பிரதமர் மோடி டென்மார்க் செல்கிறார். மூன்று நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதலாவதாக ஜெர்மனி சென்றார்.
அங்கு ஜெர்மனி அதிபர் ஒலாப் ஷோல்சை சந்தித்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர், பல உயர் வணிகத் தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா - ஜெர்மனி இடையே பசுமை வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த நிலையில், இரண்டாம் நாள் பயணமாக இன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்கு செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் மற்றும் ராணி மார்கிரேட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.